வீடியோ கான்பரன்சிங் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து..! இன்று முதல் நேரில் மனு வாங்கும் கோவை மாவட்ட ஆட்சியர்..!!

மனுவில் தொலைபேசி எண் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிப்புக்குப் பிறகு முதல் முறையாக, மக்கள் குறைதீர் கூட்டம், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்டங்களில் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ரத்து செய்து அரசு உத்தரவிட்டது. இதனால் குறைதீர் கூட்டம் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டன.

இதனிடையே, தற்போது தொற்று குறைந்துள்ள சூழலில், மீண்டும் நேரடியாக குறைதீர் கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திங்கள்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று காலை, 10:00 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்ட அறிக்கையில், 'கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்கலாம். மனுவில் தொலைபேசி எண் குறிப்பிடப்பட வேண்டும். சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...