தமிழகத்தில் இரட்டை சுடுகாட்டு முறையை ஒழிக்க சமத்துவ மயானங்கள் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை- ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பேட்டி.!!

சமத்துவ மயானங்கள் முறையை செயல்படுத்த முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும், சமத்துவ மயானங்கள் கட்டுவதற்கு கிராமந்தோறும் 10-லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு வரும் காலங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.


கோவை: தமிழகத்தில் இரட்டை சுடுகாட்டு முறையை ஒழிக்கச் சமத்துவ மயானங்கள் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட திவான்பகதூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் கலையரசி சிலம்பரசன் போட்டியிடுகிறார்.



இவருக்கு ஆதரவாகத் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பூச்சனாரி, திவான்சாபுதூர் பகுதிகளில் ஆட்டோ ரிக்சா சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் திறந்த வெளி கழிப்பிடங்களைப் பயன்படுத்தும் நிலை நீடித்து வருகிறது.

இந்த முறையை ஒழிக்கும் வகையில் கடந்த ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது அனைத்து கிராமங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தனிநபர் கழிப்பிடம், கழிப்பிட வசதி இல்லாத கிராமங்களில் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .

மேலும் பல்வேறு மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிகள் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாததால் பல கட்டிடங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுவரை மாணவர் விடுதிகள் வாடகை கட்டிடங்களில் செயல்படும்.

கிராமப்புறங்களில் உள்ள இரட்டை சுடுகாடு முறை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சமத்துவ மயானங்கள் முறையை செயல்படுத்த முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். சமத்துவ மயானங்கள் கட்டுவதற்கு கிராமந்தோறும் 10-லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு வரும் காலங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...