கோவை மாநகராட்சி சார்பாக 100-வார்டுகளில் மாபெரும்‌ தூய்மைப்‌பணி.!!

மொத்தம்‌ 10-நாட்களில்‌ நடைபெற்ற மாபெரும்‌ தூய்மைப்‌ பணிகளில்‌ 275.57 கிலோ மீட்டர்‌ நீளம்‌ வரை மழைநீர்‌ வடிகால்‌ கால்வாய்கள்‌ தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.


கோவை: மழை நீரானது குடியிருப்பு பகுதிகளில்‌ செல்வதைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கால்வாய்களைத் தூர்வாரி தூய்மை செய்திட வேண்டுமெனத் தமிழக அரசு அறிவித்தது.

தமிழகத்தில்‌ வடகிழக்கு பருவமழை நாட்களில்‌ தொடர்‌ மழையால்‌ மழைநீர் செல்லும்‌ வடிகால்‌ கால்வாய்களில்‌ உள்ள அடைப்புகளால்‌ மழை நீரானது குடியிருப்பு பகுதிகளில்‌ செல்வதைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கால்வாய்களைத் தூர்வாரி தூய்மை செய்திட வேண்டுமெனத் தமிழக அரசு அறிவித்தது.



இதனைத்‌ தொடர்ந்து, கோவை மாநகராட்சியில்‌ நடைபெற்ற மாபெரும்‌ தூய்மைப்பணிகளில்‌ கோவை மாநகராட்சியில்‌ உள்ள 100-வார்டுகளில்‌ 20.09.2021-முதல்‌ 25.09.2021-வரை 6-நாட்களில்‌ நடைபெற்ற தூய்மைப்‌ பணிகளில்‌ 185.06-கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்‌ கால்வாய்கள்‌ தூய்மைப்படுத்தியும்‌, 28.09.2021-முதல்‌ 30.09.2021-மற்றும்‌ 01.10.2021- வரை 4-நாட்களில்‌ நடைபெற்ற தூய்மைப்‌ பணிகளில்‌ 90.51-கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்‌ கால்வாய்கள்‌ தூய்மைப்படுத்தப்பட்டது.



மொத்தம்‌ 10-நாட்களில்‌ நடைபெற்ற மாபெரும்‌ தூய்மைப்‌ பணிகளில்‌ 275.57 கிலோ மீட்டர்‌ நீளம்‌ வரை மழைநீர்‌ வடிகால்‌ கால்வாய்கள்‌ தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.





Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...