கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் பேருந்து பயணச்சீட்டு பரிசோதகர் உயிரிழப்பு.!!!

விபத்து குறித்து உயிரிழந்த ஞானப்பிரகாசனின் மகன் பாலமுருகன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் பேருந்து பயணச்சீட்டு பரிசோதகர் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ் (வயது 64) இவர் பொள்ளாச்சி பகுதியில் உள்ள தனியார் பேருந்து நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் பணியாற்றி வருகிறார்

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பணிக்குச் சென்றுவிட்டு இரவு பொள்ளாச்சியில் இருந்து பேருந்து மூலம் கோவில்பாளையம் வந்துள்ளார்.

கோவில்பாளையம் பஸ் நிறுத்தத்திலிருந்து எதிரே சாலையை கடக்க முயன்ற போது பொள்ளாச்சி கோவை சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றுள்ளது

இந்த விபத்தில் ஞானப்பிரகாசுக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஞானப்பிரகாசத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஞானபிரகாஷ் உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் ஞானப்பிரகாசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்

இந்த விபத்து குறித்து உயிரிழந்த ஞானப்பிரகாசனின் மகன் பாலமுருகன்(34) கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...