பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிலில் ஈடுபட்டுள்ள 75- ஆயிரம் தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.!!

பொள்ளாச்சியில் தென்னை நார் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி துறையில் 70- சதவீத தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தென்னை நார் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி துறையில் 70- சதவீத தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இதுகுறி்த்து, தென்னைநார் தொழில் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின்(United Nation Development Program)ஆலோசகர் மற்றும் மத்திய அரசு, கயிறு வாரியத்தின் உறுப்பினர், எஸ்.கே. கவுதமன் கூறியதாவது:-

தென்னைநார் கயிறு சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்வதில் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

காயர் ஜியோ ஓவன் டெக்ஸ்டைல்ஸ், காயர்வுட், தலை விரிப்புகள், தென்னை நார் கொண்டு செய்யப்படும் அலங்காரப் பொருட்கள், கோ கோ பித் கொண்டு விவசாயம் செய்வது என்பது உள்ளிட்டவை இத்துறையில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருட்கள் ஆகும்.

தென்னை நார் தொழிலில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி 50% அதாவது 2,000 கோடி ரூபாய் பங்களிப்பு கொண்டுள்ளது.

அதேபோல், உள்நாட்டு மொத்த வணிகத்தில் பொள்ளாச்சி 5- ஆயிரம் கோடி ரூபாய் பங்களிப்பு கொண்டுள்ளது.

பொள்ளாச்சியில் தென்னை நார் சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 1.25-லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இவர்களில் 60-சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தமிழக அரசு சார்பில் தடுப்பு ஊசியை செலுத்தி கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இதனால் விரைவில் தென்னைநார் கயிறு தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...