கோவை-ஷார்ஜா இடையே இனி வாரத்தில் 5-நாட்கள் விமான சர்வீஸ்.!!!

கடந்த ஆகஸ்ட் மாதம் வாரம் மூன்று முறை வீதம் வழங்கப்பட்டு வந்த இந்த சர்வீஸ், செப்டம்பர் 1-முதல் வாரத்தில் நான்கு நாட்கள் கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கப்பட துவங்கியது.


கோவை: செப்டம்பர் 1-முதல் வாரத்தில் நான்கு நாட்கள் கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கப்பட துவங்கியது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில் சிங்கப்பூர், ஷார்ஜா மற்றும் இலங்கைக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் சர்வதேச பிரிவில் தற்பொழுது கோவை - ஷார்ஜா இடையே மட்டும் 'ஏர் அரேபியா' ஏர்லைன்ஸ் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் வாரம் மூன்று முறை வீதம் வழங்கப்பட்டு வந்த இந்த சர்வீஸ், செப்டம்பர் 1-முதல் வாரத்தில் நான்கு நாட்கள்

கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கப்பட துவங்கியது.

இந்நிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் 5 நாட்கள் விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகையில், "கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் 'ஏர் அரேபியா' விமானத்தில் 160-பேர் பயணிக்க முடியும்.

இந்த விமானம் ஒவ்வொரு முறையும் 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் செல்கிறது. தவிர ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 2.5 டன் ௭டையிலான கார்கோ இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது.

பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள காரணத்தால் இந்த மாதம் அக்டோபர் முதல் வாரத்தில் ஐந்து நாட்கள் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் உள்ளிட்ட நாட்களில் விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது." இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...