பொள்ளாச்சி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, சாலை மேம்பாடு போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை: கொரோனா தொற்றின் காரணமான கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படவில்லை எனவும், அரசின் விதிமுறையின் படி இன்று கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தைப்பொறுத்தவரை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஒன்றியங்களில் உள்ள 228 ஊராட்சிகள் உள்ளன. இதில் இடைத்தேர்தல் நடைபெறும் 36 ஊராட்சிகளைத் தவிர்த்து 192 ஊராட்சிகளில் இன்று கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சவேலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சபரி நித்யா தலைமையில் அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கிராமச்சபைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரம், மழைநீர் சேகரிப்பு முறையாக ஏற்படுத்துவது மற்றும் பல ஆண்டுகளாக போடப்படாத தார் சாலைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதேப்போல், சின்னாம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தகுமார் தலைமையிலும், மாக்கினாம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் அழகிரிசாமி தலைமையில் கிராமசபைக்கூட்டங்கள் நடைபெற்றது.

இதில் கர்ப்பிணிப் பெண்கள் தவறாமல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையாகப் பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும் மற்றும் முதல்வர் அறிவித்துள்ள மக்களை தேடி மருத்துவத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.