கோவையில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள் 3-வீடுகளில் 14-பவுன் தங்க நகை, 20-ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை: கோவையில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள் 3-வீடுகளில் 14-பவுன் தங்க நகை, 20-ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குமரன் நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி தீபா, கூலித்தொழிலாளி. நேற்று தனது வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றார். அப்போது அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அறையிலிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த நெக்லஸ், கம்மல், கை செயின், மோதிரம், உட்பட 8-கால் பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 35-ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
வீட்டிற்குத் திரும்பிய தீபா நகை மற்றும் பணம் கொள்ளை போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து, சரவணம்பட்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
இதேபோல் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த தேவராஜ் வயது 41, இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் தேவராஜ் தனது வீட்டைப் பூட்டி விட்டு திருப்பூருக்குச் சென்றார். சாவியை அவரது மனைவி நடத்திவரும் மளிகைக் கடையில் கொடுத்து விட்டுச் சென்றார்.
அந்த சாவியை எடுத்து மர்ம நபர் தேவராஜன் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றார். பின்னர் அறையிலிருந்த பீரோவைத் திறந்து அதிலிருந்த செயின் கம்மல் மோதிரம் உட்பட 5-பவுன் நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பித்துச் சென்றார்.
வீட்டிற்குத் திரும்பிய தேவராஜ் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி சேர்ந்த பிரதீப் 30-என்பவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கணபதியைச் சேர்ந்த பிரின்ஸ் ஜோசப் 41, இவர் நஞ்சப்பா ரோட்டில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவர் வழக்கம் போல தனது கடையைப் பூட்டிவிட்டுச் சென்றார். நள்ளிரவு கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூபாய் 6-ஆயிரம் ரொக்கப்பணம் பான் கார்டு ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து, பிரான்ஸ் ஜோசப் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகிறார்கள்.