கோவையில் கிராமச்சபை கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்க மக்கள்; சாலைவசதிகள் போன்ற அடிப்படை பிரச்சனைகளை மேம்படுத்த தீர்மானம்!

கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிராமசபைக்கூட்டங்களில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதோடு, சாலை வசதிகள் போன்ற அடிப்படைப்பிரச்சனைகளை மேம்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.


கோவை: கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 ஆம் தேதி கிராமசபைக்கூட்டங்களை, பாதுகாப்பு விதிமுறைகளோடு நடத்திக்கொள்ளலாம் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கிராமச்சபை கூட்டம் என்பதால் அதிகளவிலான ஆர்வம் மக்களிடையே காணப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தைப்பொறுத்தவரை இடைத்தேர்தல் நடைபெறும் 33 கிராம ஊராட்சிகளைத்தவிர்த்து அனைத்து இடங்களிலும் இன்று வெகுசிறப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளது.

குறிப்பாக கிணத்துக்கடவு பகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் முத்தூர் ஊரட்சியின் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால் மீதமுள்ள 33 கிராம ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.



கோதவாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் கிராம மக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.



மேலும் இந்தக்கூட்டத்தில் சாலை வசதி, தண்ணீா் வசதி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பின்பற்ற சொன்ன விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் குருநல்லிபாளையம், கோவிந்தனூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...