இன்னும் கொரோனா தடுப்பூசி போடவில்லையா?இன்று கோவையில் 557 இடங்களில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு.

கோவை மாவட்டத்தில் 557 தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில்‌, 2-வது தவணை தடுப்பூசி போடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. இம்முகாம்‌, காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை நடைபெறும்‌.



கோவை: கோவை மாவட்டத்தில் இன்று (அக்., 3 ஆம் தேதி) மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஒரே நாளில் 1.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

இன்று கோவை மாவட்டத்தில்‌நான்காம்‌ கட்ட தடுப்பூசி முகாம்‌ நடைபெற உள்ளது. இம்முகாம்‌ காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை நடைபெறும்‌. இம்முகாம்‌ மூலம்‌ சுமார்‌ 1.50 லட்சம்‌ பயனாளிகளுக்கு தடுப்பூசி போட உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக மாநகராட்சி பகுதிகளில்‌ 198 மையங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டம்‌ முழுவதும்‌ 557 தடுப்பூசி முகாம்களில்‌ தடுப்பூசி செலுத்தப்படும்‌. முகாமில்‌ 2-வது தவணை தடுப்பூசி போடுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌. மேலும்‌, இந்த மாபெரும்‌ தடுப்பூசி முகாமிற்காக 1,114 அங்கன்வாடி பணியாளர்கள்‌, 557 தடுப்பூசி போடுபவர்கள்‌, 200 மேற்பார்வையாளர்கள்‌ மற்றும்‌ 64 வாகனங்கள்‌ பயன்படுத்தப்படவுள்ளது. 

கோவை மாவட்டத்தில்‌ உள்ள ஊரக பகுதிகளில்‌ 226 முகாம்களும்‌, பேரூராட்சி பகுதிகளில்‌ மொத்தம்‌ 79 முகாம்களும்‌, வால்பாறை, பொள்ளாச்சி மரம்‌ மேட்டுப்பாளையம்‌ நகாராட்சி பகுதிகளில்‌ மொத்தம்‌ 39 முகாம்களும்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ 199 முகாம்களும்‌ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர 15 அரசு மருத்துவமனைகளில்‌ முகாம்கள்‌ செயல்படும்‌. 

இம்முகாமிற்காக தன்னார்வலர்கள்‌, தனியார்‌ மருத்துவமனை பணியாளர்கள்‌ மற்றும்‌ செவிலிய மாணவர்கள்‌ ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இம்முகாமின்‌ போது, தடுப்பூசி போடுபவர்களின்‌ விவரங்கள்‌ உடனடியாக கணிணியில்‌ பதிவேற்றம்‌ செய்யபட்டு, அதற்கான சான்றிதழ்‌ பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இம்மாபெரும்‌ தடுப்பூசி முகாமினை பொது மக்கள்‌ பயன்படுத்தி கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...