கோவை, ஈரோடு உள்பட 4 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பருவ மழைக்கும் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை: கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 20ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மலைப்பிரதேசங்களில் பருவமழை தொடர்பான விழிப்புணர்வுகளை பொது மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை கண்காணிக்க மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, ஈரோடு, திருப்பூர், மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பருவ மழைக்கும் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கோவை மாவட்ட வடகிழக்கு பருவமழை கண்காணிப்பு அலுவலராக முருகானந்தம், நீலகிரி மாவட்டத்திற்கு சுப்ரியா சாகு, ஈரோடு காகர்லா உஷா, திருப்பூர் கோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.