கோவையில் இருந்து மன்னார்குடிக்கு வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து மன்னார்குடிக்கு வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

கோவை - மன்னார்குடி இடையே வருகிற 7ம் தேதி முதல் சிறப்பு ரயில் செயல்பட உள்ளது.

கோவையிருந்து 7ம் தேதி முதல் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 6:40 மன்னார்குடி செல்கிறது.

மன்னார்குடியில் இருந்து வரும் 7 முதல் 8.25 புறப்படும் சிறப்பு ரயில் மறு நாள் காலை 4.45 -க்கு கோவை அடைகிறது.

திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் இந்த ரயில், மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படுகிறது. மேலும், ரயிலுக்கான முன்பதிவு நடத்து வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...