கலாச்சார முறைகளை பின்பற்ற முடியாமல் அவதி அடைந்து வருவதாக கூறி சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறை தெப்பக்குளம் மேடு பகுதியில் ஆதிவாசி மக்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்று கல்லார் ஆதிவாசி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 12 ஆதிவாசி பழங்குடியின கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஆதிவாசி கல்லார் பழங்குடியினர் கிராமத்தில் மண்சரிவு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு வசித்து வந்த 23 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அங்கு வாழமுடியாமலும் அதிக கன மழையால் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் மேல் மண் சரிந்து விழும் என்று எண்ணி வால்பாறை வட்டாட்சியர் அவரிடம் இந்த பகுதியில் உள்ள நிலையை மனுவாக வழங்கினர். அதன் பின்னர், வனத்துறையிடம் தெரிவித்தனர். மீண்டும் அதிக மழை பெய்து வந்ததால் வனப் பகுதியிலே வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருக்கக் குடிசை அமைத்தனர்.
வனத்துறை சட்டத்தின் படி, மாற்று இடம் வழங்க தேசிய புலிகள் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என்றும், வனத் துறையினர் கல்லார் ஆதிவாசி மக்கள் தற்காலிகமாக அமைத்த குடிசையை அப்புறப்படுத்தினர்.
பின்னர், மாவட்டம் மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் தலைமையில், கல்லார் செட்டில்மெண்டு மக்களுக்குத் தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் தேர்வு செய்து இடம் அளந்து அதை தேசிய புலிகள் காப்பகம் ஆணையத்திற்கு அனுப்பி பதில் தருவதாகவும் தெரிவித்தனர்.
பின் கல்லார் செட்டில்மெண்ட் பகுதியில் அதிக மண் சரிந்து வருவதாகவும், அங்கு வாழ முடியாது என்றும், மக்கள் தெரிவித்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அதிகாரிகள் தாய்முடி எஸ்டேட் நிர்வாகத்திடம் பேசி காலியாக உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளில் தற்காலிகமாக ஆதிவாசி மக்களைத் தங்க வைத்தனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர், பொள்ளாச்சி சப்-கலெக்டர் நில அளவை செய்து அதன் விவரங்களை தேசிய புலிகள் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இதுவரை எந்த முடிவும் தெரியவில்லை. கல்லார் ஆதிவாசி கிராம மக்கள் தேர்வு செய்ய தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் வழங்காத நிலையில், தேயிலை தோட்டம் குடியிருப்பில் தங்கவைத்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஆதிவாசி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக அவர்களது பூமியை விட்டு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் தங்களது கலாச்சார முறைகளை பின்பற்ற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும், அவர்களது குடும்பங்களை சேர்ந்த பெண்களும், பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உணவுப் பழக்கங்களும் மாறுபட்டு வருகிறது. இதனால் எங்களது சந்ததிகள் பாதிக்கப்படும் நிலையும் உருவாகி உள்ளது.
மேலும், கொரோனா நோய்கள் பரவக் கூடிய நிலையிலும் ஏற்பட்டு இருக்கிறது. எனவே, தேசிய புலிகள் ஆணையத்தின் உத்தரவை விரைவாகப் பெற்று தெப்பக்குளம் மேடு பகுதியில் பாரம்பரிய முறையை திருப்பித் தர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எங்களுக்கு தெப்பக்குளம் மேடு பகுதியில் குடிசை அமைக்க இடம் தர வேண்டும் என்றும், காந்தி பிறந்த நாளான இன்று ஆதிவாசி பழங்குடி கிராமத்திற்குச் செல்லும் வனப் பகுதி அருகில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் பாதுகாப்பிற்கு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வால்பாறை வட்டாட்சியர் பொறுப்பு முத்துக்குமார் ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை பலன் அளிக்காத நிலையில், உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தெப்பக்குளம் மேடு பகுதியில் இடம் வழங்கக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.