கோவையில் 4-மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை.!!

கோவையில் 4-மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால், சாலைகளில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஓடியது. கார்கள், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரால் சூழப்பட்டது.


கோவை: கோவையில் 4-மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால், பயணிகள் வாகன ஓட்டிகள், தண்ணீரில் மிதந்து சென்றனர். சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரால் சூழப்பட்டது.

கோவையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சாரல் மழையும் சிறுசிறு மழையும் பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 1-மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்துகொண்டிருந்தது. இரவு நேரத்தில் பெய்ததால் போக்குவரத்திற்கு, பொதுமக்களுக்கு எந்தவிதமான கஷ்டமில்லாமல் இருந்தது.

இந்நிலையில் பகல் நேரத்தில் வெயில் வெளுத்து வாங்கியது. திடீரென மாலை 3-மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து எங்கு பார்த்தாலும் வாடை காற்று வீசத்தொடங்கியது.

ஆதலால் வேலைக்கு சென்ற பொதுமக்கள் கரு மேகத்தைப் பார்த்து பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தங்களுடைய வீடுகளுக்கு பெர்மிசன் கேட்டுக்கொண்டு வாகனங்களில் புறப்பட்டு செல்ல தயாராகினர்.

4-மணிக்கு தொடங்கிய கனமழை கோவை காந்திபுரம், சரவணம்பட்டி, கணபதி, ரத்தினபுரி, கலெக்டர் அலுவலகம், வெரைட்டி ஹால் ரோடு, சிங்காநல்லூர், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோடு, பூ மார்க்கெட், உக்கடம், போத்தனூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.

வேலை முடிந்து பேருந்து மூலமாக செல்லக்கூடியவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நனைந்தபடி காத்துக் கொண்டிருந்தன. பேருந்துகள் நிரம்பி வழிந்தது.



சாலைகளில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஓடியது.



கார்கள் பஸ்கள் மோட்டார் சைக்கிள்கள் தண்ணீரில் மிதந்து சென்றன. சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரால் சூழப்பட்டது.



தொடர்ந்து மழை பெய்து வண்ணம் உள்ளது. பொதுமக்கள் ஒருவழியாக வேலை முடிந்து மழையில் நனைந்தபடி அவர்கள் வீட்டை சென்று அடைந்தேன்.

வானிலை ஆய்வு மையம் கோவை வேளாண் ஆராய்ச்சி மையமும் மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னத்தின் அறிகுறி காரணமாக தொடர்ந்து 4-நாட்களுக்கு மழை பெய்யும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் வெப்பத்திற்கு மத்தியில் மாலையில் மழை பெய்தது மக்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...