கோவையில் சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- 46,000 ரூபாய் சிக்கியது.!!!

கோவை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 3-மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் 46,200 -ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நீலகிரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் கணக்கில் வராத பணம் பறிமுதல்.


கோவை: கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் 2-சோதனை சாவடிகளில் ரூபாய் 46-ஆயிரம் ஆய்வில் சிக்கியது. மேலும், நீலகிரி சார்பதிவாளர் அலுவலகத்திலும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாகப் புகார் எழுந்ததை அடுத்து நேற்று இரவு முழுவதும் தமிழகம் முழுவதிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனைச்சாவடியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் அங்குலம் அங்குலமாகச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

போலீசார் அங்கு உள்ள ஆவணங்களைச் சரிபார்த்தனர். அப்போது அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூபாய் 21,600 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல கே.ஜி.சாவடி சோதனைச் சாவடிகளும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.

இதில் ரூபாய் 25,000 பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டத்தில் இரண்டு இடங்களில் 3-மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் ரூபாய் 46,200 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல நீலகிரி மாவட்டம் ஊட்டி தாலுகா அலுவலகம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் வராத ரூபாய் 78 ஆயிரத்து 490 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சில ஆவணங்களையும் போலீஸ் அதிகாரிகள் கைப்பற்றியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக துணைப்பதிவாளர் செந்தில்குமார் மற்றும் ஊழியர்களிடம் இருந்து வருகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...