தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளி விழாவை முன்னிட்டு 45- நாட்களுக்கு அரசு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. இதன் துவக்க விழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது.
திருப்பூர்: தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வெள்ளி விழாவை முன்னிட்டு 45- நாட்களுக்கு அரசு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. இதன் துவக்க விழா சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு 25-ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நாளை (அக்டோபர் 2ம் தேதி) முதல் நவம்பர் 14-ம் தேதி வரை 45-நாட்களுக்கு வெள்ளிவிழா கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 45-நாட்களுக்கு இந்த விழாவானது கொண்டாடப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு சட்டம் குறித்தும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நீதித்துறை ஆதிதிராவிடர் நலத்துறை சமூக நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வருவாய்த் துறை காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் அமைப்பு சார்பில் இந்த 45- நாட்களும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் நாள்தோறும் வட்ட அளவில் பொதுமக்களுக்குச் சட்டம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
இதன் துவக்க விழாவானது சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாளை நடைபெற உள்ளது.