மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கோவை கங்கா மருத்துவமனையில் விழிப்புணர்வு முகாம்..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் மார்பகம் அகற்றப்படும் நிலைமையை மாற்றி, அடி வயிற்றில் இருக்கும் தசைகளை ரத்தக்குழாய் உடன் எடுத்து மார்பகப் பகுதியில் ரத்தக்குழாய் உடன் இணைத்து புதியதொரு மார்பகத்தை உருவாக்குகின்றனர்.


கோவை: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கோவை கங்கா மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்களை தாக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மையானது. மற்ற புற்றுநோயால் பெண்கள் இறப்பதை விட மார்பக புற்றுநோயால் இறப்பது கூடுதலாகவே உள்ளது.

பெண்களுக்கு தங்கள் அந்தரங்க பிரச்சனைகளைக் கூறுவதில் என்றும் தயக்கம் இருக்கும். இதில் படித்தவர் படிக்காதவர் என்று குறிப்பிட முடியாது. அத்தயக்கமானது உயிரையே கொள்ளும் என்று பலரும் அறிவதில்லை. அதனால் உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதத்தை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக வெளியிட்டுள்ளது.



அதனை தொடர்ந்து, இன்று கங்கா மருத்துவமனையில் காலை 10:30 மணி முதலே - மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றது. அவ்விழிப்புணர்வு விழிப்புணர்வு முகாமில் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன என்ன? சுயமாக மார்பகங்களை எவ்வாறு பரிசோதித்துக்கொள்வது, "டயாக்னாஸ்டிக் மேமோகிராம்" பரிசோதனை பற்றியும், கங்கா மருத்துவமனை செவிலியர்கள் தெளிவுரை அழித்தனர். மேலும், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.



பெண்களை பாதிக்கும் புற்றுநோயில், மூன்றில் ஒரு பங்காக மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது, வாழ்வியல் மாற்றத்தால் மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகின்றது.

உடலுக்கு எக்ஸ் - ரே போன்று, மார்பக பரிசோதனை செய்ய பயன்படும் பிரத்யேக கருவி, ‘மேமோகிராம்!’

மார்பகத்தில் கட்டி அல்லது வேறு ஏதாவது பிரச்சனை இருந்தால், தெரிந்து கொள்ள உதவும் இது. 35 வயதிற்கு முன், ‘மேமோகிராம்’ பரிசோதனையை செய்யக் கூடாது. காரணம், இந்தப் பரிசோதனையில், கதிர்வீச்சை உடலினுள் செலுத்தியே பரிசோதிக்கிறோம்; கதிர் வீச்சால் பாதிப்புகள் ஏற்படலாம். நாற்பது வயதிற்கு மேல், மரபியல் ரீதியில், அதிக, ‘ரிஸ்க்’ உள்ள பெண்கள், ஆண்டிற்கு ஒருமுறை எக்ஸ் - ரே செய்து கொள்ளலாம்; மற்றவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யலாம்.



பெரிதும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் மார்பகம் அகற்றப்படுகிறது, இந்நிலைமையை மாற்ற கங்கா மருத்துவமனை அடி வயிற்றில் இருக்கும் தசைகளை ரத்தக்குழாய் உடன் எடுத்து மார்பகப் பகுதியில் ரத்தக்குழாய் உடன் இணைத்து புதியதொரு மார்பகத்தை உருவாக்குகின்றனர். நவீன சிகிச்சையின் பெயர் DIEP flap. இது மைக்ரோ சர்ஜரி மூலம் செய்யப்படுகிறது. மார்பக சீரமைப்புக்காக இதுவே தலைசிறந்த முறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பெண்கள் பெரிதும், மார்பக அறுவை சிகிச்சைக்குப் பிறகு தன்னம்பிக்கையை இலக்கும் நிலையில் இது பெண்களின் தன்னம்பிக்கையை உயர்த்தி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...