தமிழக கேரளா ஒப்பந்தப்படி வால்பாறையில் உள்ள நீராறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..!

தமிழக-கேரள ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு நான்கு மாதங்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நீராறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


கோவை: தமிழக கேரளா ஒப்பந்தப்படி வால்பாறையில் உள்ள நீராறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சின்னக்கல்லாறு அணை, நீராறு அணை, சோலையாறு அணை ஆகிய அணைகள் உள்ளன. வால்பாறை பகுதி கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இந்த மழை நீரை சேமிக்க சின்னக்கல்லாறு அணை, நீராறு அணை மற்றும் சோலையாறு அணைகள் உள்ளது. அணையிலிருந்து வெளியேறக்கூடிய தண்ணீரானது கேரளா வனப்பகுதிக்கு சென்று கேரளா மாநிலத்துக்கு வழங்கப்படுகிறது.

இதனை, தமிழக அரசு தமிழக மக்களுக்குப் பயன்படும் வகையில் சுரங்கப் பாதைகள் மூலம் அணையிலிருந்து தண்ணீரை மின்சாரம் தயாரித்து பரம்பிக்குளம் அணைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து காண்டூர் கால்வாய் திட்டத்தின் கீழ் அமராவதி அணைக்கு நீர் வந்து சேரும்.

பின்னர், அமராவதி அணையிலிருந்து கோவை, திருப்பூர், உடுமலை, தாராபுரம், காங்கயம், கரூர் போன்ற பகுதிகளுக்குத் தண்ணீர் விவசாயத்திற்குச் செல்கிறது.

தமிழக-கேரள ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு நான்கு மாதங்கள் என அக்டோபர் 1ம் தேதி 9 மணியிலிருந்து, பிப்ரவரி 1ம் தேதி 9 மணி வரை நீராறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டு உள்ளது.



இந்த ஒப்பந்தத்தின்படி, இன்று காலை நீராறு அணையிலிருந்து 9 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தையும் நான்கு மாதங்களுக்குத் திறந்து விடும்படி ஒப்பந்தத்தில் உள்ளதால் அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



இதையடுத்து, கேரளா மாநில நீர்நிலை அதிகாரிகள் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை நீர்நிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 236 கனஅடி வீதம் தற்போது திறந்துவிடப்பட்டுள்ளது.

மேலும், தண்ணீர் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகள் தண்ணீர் அருந்தவும், கேரளா மாநிலத்தில் உள்ள இடைமலையாறு அணைக்கு செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...