பொள்ளாச்சி அருகே 5 மாத பெண் குழந்தை கடத்தல் வழக்கில் 3 பேர் கைது ..!

ஆனைமலையில் 5 மாத பெண் குழந்தை கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் 5 மாத பெண் குழந்தை கடத்தல் வழக்கில் 3 பேர் கைது செய்த போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை முக்கோணம் பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 28ம் தேதி இரவு மைசூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சங்கீதா தம்பதியின் 5 மாத பெண் குழந்தையை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றார்.

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், ஆனைமலை போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குழந்தையை கடத்திய மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தை அங்கலக்குறிச்சியில் இருப்பதாக, நேற்று இரவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர், அங்கு சென்ற தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டனர்.

மேலும், குழந்தையை கடத்தியது தொடர்பாக அங்கலக்குறிச்சி ஜே.ஜே. நகர் பகுதியை சேர்ந்த ராமர்(45) மற்றும் சேத்துமடை பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (29) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், ஆனைமலை அருகே உள்ள அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்துப்பாண்டி(51) என்பவருக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததை அறிந்த இருவரும், முத்துப்பாண்டிக்கு குழந்தை விலைக்கு வாங்கி தருவதாக கூறியதும், இதற்காக ஆனைமலை முக்கோணம் பகுதியில், சில நாட்களாக நோட்டமிட்டு வந்ததும், அப்போது அங்கு தஞ்சமடைந்த மைசூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் சங்கீதா தம்பதியினரின் குழந்தையை கடத்த திட்டமிட்டு கடத்திச் சென்று முத்துப்பாண்டியிடம் ரூ. 1 லட்சத்திற்கு விற்பனை செய்ததும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குழந்தையை விலைக்கு வாங்கிய முத்துப்பாண்டி மற்றும் குழந்தையை கடத்திய முருகேசன், ராமர் ஆகிய மூவரையும் கைது செய்த ஆனைமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் வேறு கடத்தல் வழக்குகளில் சம்பந்தம் உள்ளதா என்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...