உஷார் மக்களே... உஷார்.!! கோவையில் தொடரும் ஆன்லைன் திருட்டுக்கள்.!!

கோவையில் பேராசிரியருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 1.39 லட்சம் மோசடி செய்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் பேராசிரியருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 1.39 லட்சம் மோசடி செய்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் தைச் சேர்ந்தவர் அன்புமணி வயது 60, ஓய்வு பெற்ற பேராசிரியர், கடந்த 24-ஆம் தேதி அவரது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

இதனை அன்புமணி பார்த்தார். இதில் லிங்க் அனுப்பப்பட்டிருந்தது. அதில் உங்களது வங்கிக் கணக்கில் பான் கார்டு பதிவு செய்யாமல் உள்ளது.

எனவே, இந்த லிங்கை அழுத்தி பான் கார்டு எண்ணை பதிவு செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அன்புமணி அந்த லிங்கில் பதிவு செய்தார். பதிவு செய்த சில மணி நேரத்தில் அவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1-லட்சத்து 39-ஆயிரத்து 794- எடுக்கப்பட்டது.

இதில் அதிர்ச்சி அடைந்த அன்புமணி இது தொடர்பாகக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் இன்று புகார் செய்தார். காவல்துறை புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...