கோவையில் நர்சிங் கல்லூரியில் ராக்கிங்: 4 மாணவர்கள் கைதானநிலையில் 9 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

கோவை சரவணம்பட்டிக்கு அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவரிடம் ராக்கிங் செய்த சீனியர் மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 9 பேரை தேடிவருகின்றனர்.


கோவை: கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் செல்லும் சாலையில் பிபிஜி நர்சிங் கல்லூரி செயல்பட்டுவருகிறது.

இந்த கல்லூரியில் கோவையைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமில்லாமல் கேரள மாநிலத்திலிருந்திருந்தும் பல மாணவர்கள் இங்கேயே தங்கி படிக்கிறார்கள். கொரோனா காலக்கட்டத்திலும் மாணவர்கள் அட்மிஷன் பணிகள் நடைபெற்றதோடு, ஆன்லைன் வகுப்புகளும் செயல்பட்டுவந்தது.

இங்கு,கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த 20 வயதான மாணவர் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். ஊரடங்கினால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில் தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. இதனால் கேரளத்தைச்சேர்ந்த இந்த மாணவர் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேி கல்லூரிக்கு வந்துள்ளார் அங்கே உள்ள விடுதியில் தங்கிப்படித்துவருகிறார். இந்நிலையில் தான் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தனியாக இருந்த மாணவர் அறைக்கு சென்ற சீனியர்கள் 13 பேர் அந்த மாணவரை தங்களது அறைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் அனைவருக்கும் ராக்கிங் செய்ததோடு தங்கள் பெயரை சரியாக செல்ல வேண்டும் இல்லாவிடில் இந்த அறையை விட்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் சரியாக சொல்லாத சமயத்தில் சீனியர்கள் மாணவரின் கன்னத்தில் அறைத்து சித்ரவரை செய்துள்ளனர். இதுக்குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவர் சொந்த ஊருக்கு சென்று நடந்ததையெல்லாம் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்ததோடு உடனடியாக மருத்துவமனையில் அனுமதி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து கோவை சரவணம்பட்டி காவல்நிலையத்தில் இதுக்குறித்து புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ராக்கிங் செய்த மாணவர்கள் மீது வழக்குப்பதிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 4 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாகியுள்ள 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரிகளில் ராக்கிங் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை கல்லூரியில் நிகழந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...