கோவை மாநகர் காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொருட்களை அழிப்பதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
கோவை: கோவை மாநகர் காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறை போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பொருட்களை அழிப்பதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இருந்தாலும், தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. கோவை போத்தனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நஞ்சுண்டாபுரம் கோணவாய்க்கால் ரயில் பாலம் அருகே சிலர் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசியத் தகவல் காவல்துறைக்கு வந்தது.
இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் தலைமையிலான காவல்துறை தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்குப் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த போத்தனூர் சாரதாமில் ரோட்டை சேர்ந்த பிரசாந்த் வயது 31, என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடம் இருந்த 10-போதை மாத்திரைகளை காவல்துறை பறிமுதல் செய்தனர். சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் கோட்டை ராமசாமி நாயக்கர் வீதி வழியாக ரோந்து சென்றனர்.
அங்குக் கஞ்சாவைப் பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த கோட்டைமேட்டை சேர்ந்த முகம்மது யூசுப் 60, என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 500-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.