கோவை மாவட்ட எஸ்.பி., உத்தரவுப்படி கிணத்துக்கடவு பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து 3-வது நாளாக ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை மாவட்ட எஸ்.பி., உத்தரவுப்படி கிணத்துக்கடவு பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்து 3-வது நாளாக ஓவர் லோடு ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளில் சட்ட விரோதமாகவும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, கிணத்துக்கடவு காவல்துறையினர் கடந்த 28-ஆம் தேதி முதல் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 28, 29-தேதிகளில் நடத்திய சோதனையில் அதிகம் பாரம் ஏற்றி வந்த 4-லாரிகளை பறிமுதல் செய்து ஒரு லட்சத்து 49-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்த நிலையில் 3-வது நாளாக இன்றும் கிணத்துக்கடவு காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது காரசேரி பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, தலைமைக் காவலர் செல்வகுமார் ஆகியோர் வாகனத்தை ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த இரண்டு லாரிகளை சோதனை செய்தபோது அதில் அரசு நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாகப் பாறைக் கற்கள் மற்றும் எம் சாண்ட் மணல் இருந்தது தெரியவந்தது
இதையடுத்து, இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் 56-ஆயிரத்து 720- ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.