பொள்ளாச்சியில் மதுபானகடையை ஏலத்திற்கு எடுக்கலாம் எனக்கூறி கடை உரிமையாளரை ஏமாற்றி அழைத்துச்சென்று கொள்ளையடித்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.88 ஆயிரம் மற்றும் ¼ தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சட்டத்திற்கு விரோதமாக மதுக்கடை ஒன்றை நடத்தவருகிறார்.
இவரது கடையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ராஜா என்பவர் பணிபுரிந்துவரக்கூடிய நிலையில் சட்டவிரோதமாக இனி மதுக்கடைகளை நாம் நடத்தவேண்டும் எனவும், புதிதாக மதுபானக்கடை ஒன்றை துவங்கி அக்கடையில் நமக்கு தெரிந்தவரகளைப் பணிக்கு அமர்த்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனைக்கேட்ட சதீஷ்குமார் மதுக்கடையை ஏலத்தில் எடுப்பதற்காக ரூபாய் 1,04,000/-பணத்தை வாங்கிக்கொண்டு வந்துள்ளார்.
பின்னர் ராஜா அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து மதுக்கடை ஏலத்தில் எடுப்பதாகக் கூறி இனோவா காரில் அழைத்துச்சென்றனர். அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் பகுதியில் சென்றபோது ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சதீஷ்குமாரை மிரட்டி அவரிடமிருந்த ரூ.1,04,000/- பணத்தையும் அவர் அணிந்திருந்த 1/4 தங்க நகை மற்றும் அவரது செல்போனையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுக்குறித்து உடனடியாக பாதிக்கப்பட்ட சதீஷ்குமார் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் உத்தரவின்பேரில் பேரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமால் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் கொள்ளைக்கும்பல் நீலகிரி மாவட்டத்தில் தலைமறைவாக இருந்ததை அறிந்த நிலையில் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர். பின்னர் ராஜா, கண்ணன் கருப்பசாமி, ஈஸ்வரன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் மீது கொள்ளை வழக்குப்பதிவு செய்ததோடு அவர்களிடமிருந்து ரூபாய் 88,200/-, 1/4 தங்க நகை, கைபேசி-1 மற்றும் அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் திறம்படச் செயல்பட்டு கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்களைப் பிடித்த தனிப்படை குழுவினர், பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் திருமால், கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ், தலைமை காவலர் ஐதர்அலி மற்றும் மு.நி.காவலர் வினோத்சர்மாமெர்குரி ஆகியோர்களுக்கு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டினைத்தெரிவித்தார்.