கடன் உத்தரவாத திட்டம் போன்ற சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை பரீசிலித்து நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி- லகு உத்யோக் பாரதி தமிழ்நாடு

கடன் உத்தரவாத திட்டம் போன்ற சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பல்வேறு கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுத்த மத்திய நிதி அமைச்சருக்கு ௨த்யோக் பாரதி - தமிழ்நாடு சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.



கோவை: சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பல்வேறு கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுத்த மத்திய அரசிற்கு நன்றியை தெரிவிப்பதாக 'லகு ௨த்யோக் பாரதி - தமிழ்நாடு' அமைப்பின் இணை பொதுச்செயலாளர் எம் சிவக்குமார் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:- சென்னையில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி எங்களது அமைப்பின் நிர்வாகிகள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக கூறினார். நிதியமைச்சரும் இதுக்குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் தான், நேற்று செப்டம்பர் 29ம் தேதி மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. அதில் எங்கள் அமைப்பு சார்பில் மத்திய நிதி அமைச்சரிடம் வலியுறுத்திய பிரதிநிதித்துவங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

குறிப்பாக அவசர கால கடன் உத்திரவாத திட்டம் 1.0 மற்றும் 2.0 இன் கீழ் தற்போது உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் கடன் வாங்கியவர்கள் 2020 பிப்ரவரி 29 அல்லது 2021 மார்ச் 31 வரை நிலுவையில் உள்ள கடன் தொகையில் 10 சதவீதம் வரை கூடுதல் கடன் பெற தகுதி உடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர கால கடன் உத்திரவாத திட்டம் 1.0 அல்லது 2.0 இன் கீழ் உதவி பெறாத வணிகங்கள் இந்தாண்டு மார்ச் 31 வரை நிலுவையில் உள்ள கடன் தொகையில் 30 சதவீதம் வரை கடன் ஆதரவைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

இதோடு அவசரகாலக் கடன் உத்திரவாதத் திட்டம் 3.0 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளத் துறைகளில் வணிகங்கள் முன்னர் அவசர கால கடன் உத்திரவாத திட்டம் பயன்படுத்தாதவர்கள் 2021 மார்ச் 31 அன்று நிலுவையில் உள்ள கடன் தொகையில் 40 சதவீதம் வரை கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கடன் வாங்குபவருக்கு அதிகபட்சம் 200 கோடி வரை வழங்கப்படும். கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்ட பல்வேறு வணிக நிறுவனங்களை ஆதரிக்கும் நோக்கில் அவசர கால கடன் உத்திரவாத திட்டம் காலக்கெடு 2022 மார்ச் 31 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அல்லது இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 4.5 லட்சம் கோடி 2022 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் வணிக நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு சிறு, குறு நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும் இந்நிறுவனங்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கு உதவிசெய்கிறது. மேலும் இது அனைத்து சிறு, குறு தொழில் நிறுவன அவசர காலத்துக்கு தேவையான ஆதரவை வழங்குகிறது என கூறினார்.

மத்திய நிதி அமைச்சரின் இந்த நடவடிக்கை மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது எனவும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து அதற்கான தேவைகளை பூர்த்தி செய்த நிதி அமைச்சருக்கு 'லகு ௨த்யோக் பாரதி - தமிழ்நாடு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...