கோவை சிட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ கல்வி கற்றல்‌ திறன்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ ஆய்வு.!!

கோவை மாநகராட்சி வெரைட்டி ஹால்‌ சாலையிலுள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ மாணவ, மாணவிகளின்‌ கல்வி கற்றல்‌ திறன்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா திடீர்‌ ஆய்வு.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வெரைட்டி ஹால்‌ சாலையிலுள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ மாணவ, மாணவிகளின்‌ கல்வி கற்றல்‌ திறன்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இன்று (30.09.2021) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வெரைட்டி ஹால்‌ சாலையிலுள்ள சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ திடீர் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌‌, கல்வி கற்றல்‌ திறன்‌ குறித்து மாணவ, மாணவிகளின்‌ திறனைக்‌ கண்டறிய செய்தித்தாள்‌ வாசிப்பு மூலமும்‌ கரும்பலகை மூலமும்‌ கணித திறன்‌ குறித்தும்‌ தங்களது திறனை வெளிப்படுத்துமாறு எடுத்துரைத்தார்‌.

அதனைத்‌ கொடார்ந்து, மாணவ, மாணவிகள்‌ செய்தித்தாள்களை வாசித்து தங்களது திறனை வெளிப்படுத்தியும்‌, கரும்பலகையில்‌ கணித பாடத்திறன்‌ குறித்தும்‌ செயல்முறை விளக்கம்‌ மூலம்‌ மாணவ, மாணவிகள்‌ தங்களது கணித அறிவுத்திறனை வெளிப்படுத்தினார்கள்‌.

மிகச்சிறப்பாகக் கல்வித்திறனை வெளிப்படுத்திய மாணவிக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ புத்தகம்‌ வழங்கி பாராட்டினை தெரிவித்தார்‌. தொடர்ந்து, அப்பள்ளியில்‌ உள்ள நூலகத்தில்‌ ஆய்வு மேற்கொண்டு, நூலகத்தில்‌ வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள்‌ குறித்துக் கேட்டறிந்த பின்னர்‌, பள்ளியின்‌ கழிப்பறை வசதி, குடிநீர்‌ வசதி குறித்துக் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்கள்‌.

இந்த ஆய்வின்போது, பள்ளி தலைமை ஆசிரியர்‌, ஆசிரியர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...