திருப்பூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் - ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!

போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு முருகம்பாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.



இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் பலரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று திருப்பூர் அவினாசி சாலை, குமார் நகர் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது.

இதையடுத்து, போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...