கோவையில் மோசடி நிதி நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவு..!

வழக்கினை விசாரித்த நீதிபதி, நிரந்தர முடக்கம் செய்து பொது ஏலத்தில் விட, மாவட்ட வருவாய்த் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.


கோவை: மோசடி நிதி நிறுவனத்தின் சொத்துக்களை ஏலம் விட, கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோவை, டாடாபாத்தில் செயல்பட்டு வந்த சீனிவாச பெருமாள் பைனான்ஸ் நிறுவனம், 2008 வரை 654 பேரிடம், 4.22 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவன பங்குதாரர்கள் கிருஷ்ணமூர்த்தி, வரதராஜன், விஜயராகவன், சித்ரா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கில், நிதி நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட டாடாபாத்திலுள்ள 5,200 சதுர அடி கட்டடம் அரசால் இடைமுடக்கம் செய்யப்பட்டது.

இந்த சொத்தை நிரந்தர முடக்கம் செய்து, பொது ஏலத்தில் விட அனுமதி கோரி, அரசு தரப்பு வக்கீல் மாணிக்கராஜ் மனு தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் நிரந்தர முடக்கம் செய்து பொது ஏலத்தில் விட, மாவட்ட வருவாய்த் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...