வீட்டின் பின்பக்கம் இருந்த சிமெண்ட் தொட்டி நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சூலுார் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சூலுார் அடுத்த பள்ளபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்பக்கம் சென்ற சிறுவன் பிரகாஷ் (4) நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. குடும்பத்தினர் அனைத்து பகுதியிலும் தேடினர்.
இந்த நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள சிமெண்ட் தொட்டி நீரில் மூழ்கி கிடந்த சிறுவனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சிறுவனை மீட்டு, கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
ஆனால், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதால், குடும்பத்தினர் கதறினர். இது குறித்து சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.