போலீசார் விசாரணையில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, மொத்தமாக கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது.
கோவை: கோவையில் இருந்து கேரளாவுக்கு 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்திய புளி வியாபாரி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஆலாந்துறை, இருட்டு பள்ளம் பகுதியில், கடந்த 6ம் தேதி வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, சிறுவாணி மெயின்ரோட்டில், வந்தலாரியை நிறுத்தி பார்த்தபோது, 40 மூட்டைகளில் 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
விசாரணையில், ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, மொத்தமாக கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த புளி வியாபாரி ஜெயதீஷ் (36) கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமின் மனுவை 'தள்ளுபடி' செய்தார்.