பேரூர் தமிழ் கல்லூரி பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: யு.ஜி.சி யின் வழிகாட்டுதலின் பேரில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி இணை பேராசிரியர் கா. திருநாவுக்கரசு மீதான பாலியல் குற்றச்சாட்டு மீது யு.ஜி.சி மற்றும் விசாகா கமிட்டி வழிகாட்டுதலின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள, கல்லூரி நிர்வாகம் முடிவு.


கோவை:பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் இணை பேராசிரியராக பணியாற்றி வரும் கா. திருநாவுக்கரசு மீதான பாலியல் குற்றச்சாட்டின் மீது, யு.ஜி.சி மற்றும் விசாகா கமிட்டியின் வழிகாட்டுதலின் பேரில் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. 

கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி தமிழ் பேராசிரியர் கா.திருநாவுக்கரசு என்பவரின் மீது பாலியல் வழக்கு போடப்பட்டுள்ளது. அவரை நிரந்தர பணி நீக்கம் செய்யக்கோரி, முன்னாள் மாணவர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முன்னாள் மாணவர் சதீஷ்குமார் என்பவரிடம், தற்போது பயின்று வரும் கல்லூரி மாணவிஇணை பேராசிரியர் திருநாவுக்கரசு ஆபாசமாக ஆன்லைனில் பேசி தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். அப்புகாருக்கான விளக்கத்தை திருநாவுக்கரசு அளிக்க கோரி கல்லூரி நிர்வாகம் மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி தெரிவித்திருந்தது.

அதன்படி, கடந்த 27ஆம் தேதி திருநாவுக்கரசு விளக்கமளித்துள்ளார். அவர் அளித்த விளக்கம் திருப்திகரமானதாக இல்லாததால்,கல்லூரி நிர்வாகம் அவரை 27 ஆம் தேதி பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற கூட்டத்தில் விசாகா கமிட்டியின் பரிந்துரைப்படியும், யு.ஜி.சியின் வழிகாட்டுதல் படியும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...