கோவை சவுரிபாளையம் அருகே முகவரி கேட்பது போல் நடித்து, பெண்ணிடம் செயின் பறிப்பு

கோவை சவுரிபாளையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பெண்ணிடம் 2.5 சவரன் செயின் பறிப்பு. திருட்டில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை போலீசார் சிசிடிவி மூலம் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் நடந்து சென்ற பெண்ணிடம், பின்தொடர்ந்து சென்று முகவரி கேட்பது போல நடித்து கழுத்திலிருந்த இரண்டரை பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சவுரிபாளையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மேத்யூ, இவரது மனைவி ரெனி மேத்யூ வயது 53. இவர் அந்த பகுதியில் உள்ள ஜி.வி.ரெசிடென்சி வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், ரெனியிடம் இந்த முகவரி எங்கு உள்ளது? என்று கேட்டபடி ஒரு பேப்பரை நீட்டியுள்ளனர்.

அவர்களிடம் அந்த முகவரி குறித்து அந்த பெண்மணி விளக்கிக் கொண்டு இருக்கும்போது, வேண்டுமென்றே பேப்பரை அந்த நபர்கள் கீழே போட்டுள்ளனர். அதை எடுக்க, அந்த பெண் குனிந்த போது, அவர் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க செயினை, கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர்.

அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...