கோவை தொழிலதிபர் கொலை மிரட்டல் வழக்கு: தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!

கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, ஜான்பாண்டியன் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.



கொலை மிரட்டல் விடுக்கச் சொன்னது அவர்தான் என கைதான 7 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை.

கோவை: கோவை வடவள்ளியைச் சேர்ந்த தீபக் அரோரா, இவர் சரவணம்பட்டி பகுதியில் வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். நிறுவனத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜெயராஜ் உட்பட 7 பேர் சென்று உடனடியாக இடத்தை காலி பண்ணவேண்டும் என அவரை மிரட்டியதாக, தீபக் அரோரா கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்து, 7 பேரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தான் இந்த இடத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாங்கி விட்டதாகவும், அந்த இடத்தில் இருக்கும் நபரை காலி செய்து தருமாறு கூறியதை அடுத்து, நாங்கள் அங்குச் சென்ற இடத்தை காலி செய்யக் கொலை மிரட்டல் விடுத்து வற்புறுத்தியதாகப் போலீசில் அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் மீது கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...