நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் பணியாற்ற விரும்பமுள்ளவர்கள் விண்ணப்பக்கலாம்; தன்னார்வலருக்கு அழைப்பு விடுத்த கோவை மாநகராட்சி!

நமக்கு நாமே திட்டத்தில்‌ பங்கேற்க விருப்பமுள்ள கோவை மக்கள் தாங்கள்‌ செயல்படுத்த விரும்பும்‌ மக்கள்‌ நல திட்டத்தைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம் என கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.



கோவை: தமிழகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் உத்தரவின்படி, மீண்டும் தமிழகம் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இத்திட்டத்தின் படி பல்வேறு சமூக நலப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், சி.எஸ்‌.ஆர்‌. நிதி வழங்கும்‌ நிறுவனங்கள்‌, குடியிருப்போர்‌ நலச்சங்கங்கள்‌ உள்ளிட்டோர்‌ ஒரு பங்கு நிதி அளித்தால்‌, அரசு சார்பில்‌ கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள்‌ பரிந்துரைக்கும்‌ சிறப்பு நலப்பணிகள்‌ மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு பணிகளான பூங்கா உள்ளிட்ட வசதிகள்‌, நீர்நிலைகள்‌ புனரமைத்தல்‌, பள்ளிகள்‌ மற்றும்‌ அங்கன்வாடி மேம்பாடு, மரக்கன்று நடுதல்‌, நவீன தெரு விளக்குகள்‌ அமைத்தல்‌, விளையாட்டு மைதானங்கள்‌, நூலகங்கள்‌, சுகாதார நிலையங்கள்‌, மின்மயானங்கள்‌ அமைத்தல்‌, சாலைகள்‌, சிறுபாலங்கள்‌ மற்றும்‌ மழைநீர் வடிகால்‌ அமைத்தல்‌ போன்ற பணிகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளவிருக்கிறது.

எனவே நமக்கு நாமே திட்டத்தில்‌ பங்கேற்க விருப்பமுள்ள கோவை மக்கள் தாங்கள்‌ செயல்படுத்த விரும்பும்‌ மக்கள்‌ நல திட்டத்தைத் தோ்வு செய்து, அதற்கான விண்ணப்பத்தை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அல்லது மாநகரப்‌ பொறியாளரிடம்‌ வழங்கலாம் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும்‌ இதுக்குறித்த கூடுதல் விபரங்களை அறிய மாநகரப்‌ பொறியாளரை நேரில் சந்திக்கலாம்.

இல்லாவிடில் 8190000200 என்ற தொலைபேசி எண்ணிற்கு அல்லது [email protected] என்ற இ-மெயில்‌ மூலம்‌ தொடர்பு கொண்டு கேட்டறிந்துக்கொள்ளலாம்‌ என கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...