அரசு நடத்துனருக்கு மீண்டும் வேலை தர உத்தரவிட்ட நீதிமன்றம்; அவமதிப்பு வழக்கிற்காக அரசுப்பேருந்து சிறைப்பிடிப்பு!

அரசு விடுமுறை நாளில் பணிக்கு விடுமுறை எடுத்த நடத்துனரை பணிநீக்கம் செய்தமையை திரும்ப பெற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை நிறைவேற்றாத காரணத்தினால் அரசு பேருந்தை கோவை நீதிமன்றம் பறிமுதல் செய்தது.


கோவை: கோவையை அடுத்த கருமத்தம்பட்டியைச்சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன். கருமத்தம்பட்டியில் உள்ள அரசு பஸ் போக்குவரத்து கழகத்தில் நடுத்துனராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அதாவது விடுமுறை நாளில் பணிக்கு வராமல் வீட்டில் இருந்துள்ளார். இதற்காக இவரை தற்காலிக பணி நீக்கம் செய்து நிர்வாகத்தினர் உத்தரவிட்டனர். இதோடு மட்டுமின்றி கடந்த 2016 ஆம் ஆண்டு முழுமையாக பணிநீக்கம் செய்ததாக நடத்துனர் சுப்பிரமணியனிடம் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த உத்தரவினை எதிர்த்து, பாதிக்கப்பட்ட அரசு நடத்துனர் கோவை நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு நடத்துனரிடம் பணி நீக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்ததோடு, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி மீண்டும் வேலைக்கொடுப்பதுடன் அவர்க்கு இதுவரை வழங்கப்பட வேண்டிய சம்பளத்தையும் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனால் இதுவரை கோவை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இதுவரை அரசுப்போக்குவரத்துக்கழகம் நடைமுறைப்படுத்தாமல் கால தாமதப்படுத்தியது. எனவே நீதிமன்ற அவமதிப்பாக கருதி இன்று மதியம் 1.35 மணியளவில் கோவை ரயில் நிலையம் வந்த அரசுப்பேருந்தை(TN 38 N 3570 வழித்தடம் 11) பறிமுதல் செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பலரும் பாராட்டிவருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...