மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மலைப்படியை வழங்க வேண்டும்- பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தல்.!!

மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மலைப்படி வழங்கப்படாமல் உள்ளது. உடனடியாக வழங்கிட வேண்டும் எனக் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்பி வலியுறுத்தினார்.


கோவை: மலைப்பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மலைப்படியை வழங்கிட கோவை மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி வலியுறுத்தினார்.

பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் கடந்த மூன்று தலைமுறைகளாக இழப்பீடு பெறாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். கோவை நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ஏழை-எளிய விவசாயிகளுக்கு எதிராக மேல்முறையீட்டை அரசு செய்துள்ளது.

தனது நிலத்திற்கான இழப்பீட்டைப் பெறாமலேயே பல விவசாயிகள் இறந்து போயுள்ளனர். இவர்கள் வீட்டுச் சுப நிகழ்வுகள் கூட பொருளாதார வசதிகள் இல்லாமல் தடைப் பட்டு நிற்கிறது. இது தொடர்பாகத் தொடர்ந்து விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி இடைவிடாது போராட்டம் நடத்தி வருகிறது.

தற்போது ஆட்சி மாறியுள்ள சூழலில் இந்த இழப்பீடு கிடைக்கும் என்கிற நம்பிக்கை இவ்விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் புதனன்று கோவை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விளக்கினார்.

அரசு தொடுத்துள்ள மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற வேண்டும். கோவை நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட வட்டி தொகை வழங்க வேண்டும்.

நிலம் கையகப்படுத்தும் போது வீட்டிற்கு ஒருவருக்கு வேலை என்கிற உத்தரவாதத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆகிய கோரிக்கைகளைத் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தினார்.

மேலும், காடம்பாடி, வாரப்பட்டி உள்ளிட்ட சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை என்பது அதிகரித்துள்ளது. உடனடியாக இதனைச் சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேட்டுப்பாளையம், காரமடை பகுதியின் மலைப்பகுதிகளில் ஏராளமான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு வழங்க வேண்டிய மலைப்படியை தரப்படாமல் உள்ளது. இதுகுறித்து உடனடியாக விசாரித்து மலைப்படியை வழங்க வேண்டும்.

இதேபோன்று காரமடை பகுதியில் பணியாற்றும் தூய்மைத் தொழிலாளர்களுக்கு கடந்த 18-மாதங்களாக ஊதியம் தரப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும்.

வெள்ளளூர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளி கடந்த நான்கு ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் உள்ளது. இது திறக்கப்பட்டால் அங்குள்ள குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கு வசதியாக இருக்கும், உடனடியாக அப்பள்ளியைத் திறப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உறுதியளித்தார். மாவட்ட ஆட்சியருடனான சந்திப்பின் போது கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனுடன் சி.பி.எம் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சி.பி.எம் கிழக்கு நகர செயலாளர் என்.ஜாகீர், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர்.



முன்னதாக பாரதியார் பல்கலை கழத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...