புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு உடனடியாக அரசு அனுமதிக்க வேண்டும்.!!‌

இந்துக்களின்‌ புனிதமான புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு உடனடியாக அரசு அனுமதிக்க வேண்டும்‌ என இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் மாநில தலைவர்‌ காடேஸ்வரா சுப்பிரமணியம்‌ அறிக்கை.


கோவை: இந்துக்களின்‌ புனிதமான புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டிற்கு உடனடியாக அரசு அனுமதிக்க வேண்டும்‌ என இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் மாநில தலைவர்‌ காடேஸ்வரா சுப்பிரமணியம்‌ அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில்‌ வழிபாட்டுத்‌ தலங்களைப் பக்தர்கள்‌ வழிபட அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கொரொனா தொற்று குறைத்து வருகிறது. அரசுப் பள்ளிகள்‌, சினிமா தியேட்டர்கள்‌, மால்கள்‌, சாராயக்‌ கடைகள்‌ (டாஸ்மாக்‌) என அனைத்திற்கும்‌ கட்டுப்பாடுகள்‌ தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால்‌ கோவில்கள்‌, வழிபாடுகளுக்கு மட்டும்‌ கட்டுப்பாடு விதிப்பது

நியாயமற்றது.

குறிப்பாக இந்துக்களின்‌ மிக முக்கியமான விரதமிருந்து பெருமாளை வணங்கும்‌ புரட்டாசி சனிக்கிழமை மிகவும்‌ புனிதமானது. இந்த சனிக்கிழமை இறை வழிபாட்டை அரசு தடை செய்துள்ளது கண்டனத்துக்குரியது. தமிழக அரசு உடனடியாக கோவில்களைத் திறந்து கட்டுப்பாடுகளுடன்‌ பக்தர்கள்‌ தரிசனத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்‌ என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...