கிணத்துக்கடவில் ஜல்லி கற்களை ஓவர்லோடு ஏற்றி வந்த மினி லாரி பறிமுதல்.!!

அரசம் பாளையத்தில் ஜல்லிக் கற்களை ஓவர்லோடு ஏற்றி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்ததால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே அரசம் பாளையத்தில் ஜல்லிக் கற்களை ஓவர்லோடு ஏற்றி வந்த மினி லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்ததால் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம் பாளையம் பகுதியில் இன்று கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரன், காவலர் ஜோசப் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக ஜல்லிக் கற்களை ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் அரசு நிர்ணயித்த அளவைவிடக் கூடுதலாக ஜல்லிக்கற்கல் இருந்தது தெரியவந்தது.



இதையடுத்து அந்த மினிலாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்ததாக 28ஆயிரம்660 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Newsletter

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...