மழைக்காலம் என்பதால் கோவை மாநகராட்சியில் வடிகால்வாய்களைத் தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் – ஆணையர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவு

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் வடிகால்வாய்களைத் தூய்மைப்படுத்தி, கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் முன்களப்பணியாளர்கள் மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அப்பகுதியில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் முன்களப்பணியாளர்கள் மக்களுக்கு வீடு, வீடாகச்சென்று சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளதா? என்பது குறித்து சோதனை மேற்கொள்ளும் போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பரிசோதனையின்‌ விபரங்களை கோவிட்‌-19 கள ஆய்வுப்‌ பதிவேடுகளில்‌ பதிவு செய்திட வேண்டும்‌ எனவும் களப்பணி மேற்கொள்ளும்போது முகக்கவசம்‌ அணிந்தும்‌, கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தி பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதோடு கொசுவினால்‌ ஏற்படும்‌ டெங்கு போன்ற நோய்களைத் தடுப்பதற்காக பொதுமக்களிடம்‌ வீடுகளில்‌ உபயோகமற்ற பொருட்கள்‌, பயனற்ற பிளாஸ்டிக்‌ பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்‌ எனவும் வீடுகளில்‌ உள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசுக்கள்‌ புகாவண்ணம்‌ மூடி வைக்க வேண்டும்‌ என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்த ஆணையர், பொதுமக்களிடம்‌ இதுக்குறித்து போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்‌ என கூறினார்.



இதனைத்‌ தொடாந்து, வார்டு எண்‌.5க்குட்பட்ட கவுண்டம்பாளையம்‌, சேரன்‌ நகர்‌ பகுதியில்‌ 6 இலட்சம்‌ கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்‌ தொட்டியிலிருந்து விநியோகப்படும்‌ குடிநீர் பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



அதன் பின்னா், வார்டு எண்‌.8 இந்திரா நகா்ப்‌ பகுதியில்‌ மழைநீர் வடிகால்‌ கால்வாயில்‌ தூர்வாரும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.



அப்போது தூய்மைப்பணியாளார்களிடம்‌ வடிகால் கால்வாய்களிலுள்ள அடைப்புகளை அகற்றி சீராகத் தண்ணீர் செல்லும்‌ வகையில்‌ தூய்மைப்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளா்களிடம்‌ வலியுறுத்தினார்.



மேலும் கோவை மாநகர சீர்மிகு நகரத் திட்டத்தின்‌ கீழ்‌ கிருஷ்ணம்பதி குளத்தில்‌ நடைபெற்றுவரும்‌ புனரமைப்பு பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இதோடு 21வது வார்டுக்கு உட்பட்ட பனைமரத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்‌ புதியதாக வகுப்பறைக்‌ கட்டிடம்‌ கட்டப்பட்டுவரும்‌ பணிகள்‌ குறித்து பார்வையிட்ட பின்பாக, பூசாரிபாளையம்‌ பகுதியிலுள்ள முதியோர்‌ இல்லத்திலும் ஆய்வினை மேற்கொண்டார்.

இன்று மேற்கு மண்டலத்திற்கு உள்பட்ட பல பகுதிளில் ஆணையர் நடத்திய ஆய்வின் போது,மேற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சிவசுப்பிரமணியம்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்‌ ஜெகதீஸ்வரி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தார்கள்.

Newsletter

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...

வார்டு வளர்ச்சிப் பணிகள் புறக்கணிப்பு குற்றச்சாட்டு; கோவையில் தி.மு.க கவுன்சிலர் தர்ணா

கோவை அருகே தென்கரை பேரூராட்சி மன்றக் கூட்டத்தின் போது, தனது வார்டில் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மைப் பணிகள் புறக்கணிக...