மயில்கள் தொல்லை இருந்து வரும் நிலையில் காட்டுப்பன்றி தொல்லைகளும் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.
கோவை: கிணத்துக்கடவு அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையம், நல்லட்டிபாளையம், கோதவாடி, தேவரடிபாளையம் ஆகிய பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் மூலம் வாழை, தக்காளி, கத்திரி போன்ற பயிர்கள் ஏக்கர் கணக்கில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
ஆனால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள விளை நிலங்களுக்குள் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கிணத்துக்கடவு காமராஜ் காலனி பகுதியில் கணேஷ் என்பவருக்குச் சொந்தமான விளை நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட நேந்திரம் வாழை கன்றுகளை நேற்று இரவு புகுந்த காட்டுப்பன்றி கூட்டம் சேதப்படுத்தியுள்ளது.

வாழைகளை வேரோடு பிடுங்கி தண்டுகளை மட்டும் சாப்பிட்டுச் சேதப்படுத்தி உள்ளது.

வாழை சாகுபடி செய்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் முளைக்கும் தருவாயில் உள்ள வாழைகளைக் காட்டுப்பன்றி சேதப்படுத்தி இருப்பது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே மயில்கள் தொல்லை இருந்து வரும் நிலையில் தற்போது காட்டுப்பன்றி தொல்லைகளும் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.