வரும் 1ம் தேதி முதல் கோவை காந்திபுரம் சென்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து உதகை, கூடலூருக்கு பேருந்துகள் இயக்கம்..!

பயணிகள் யாரும் மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என போக்குவரத்து துறையினர் அறிவித்துள்ளனர்.


கோவை: வரும் 1ம் தேதி முதல் கோவை காந்திபுரம் சென்ரல் பேருந்து நிலையத்தில் இருந்து உதகை, கூடலூர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊட்டி கூடலூர் பேருந்துகள் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து உதகை மற்றும் கூடலூர் பகுதிக்கு இயக்கப்பட்டு வரும் இரவு நேர பேருந்துகள் அனைத்தும் வரும் 1.10.2021 அன்று முதல் இரவு 10 முதல் காலை 6 மணி வரை கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கோயம்புத்தூர் பகுதியிலிருந்து உதகை மற்றும் கூடலூர் பகுதிகளுக்கு இரவு நேர பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் செல்வதை தவிர்த்து கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் இரவு நேர பேருந்து வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....