கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சைச் சிறப்பாக அளிக்கப்பட்டதாக மருத்துவமனை முதல்வர் டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
கோவை: கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு அவசர கால மற்றும் உயர்தர சிகிச்சை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மூலம் அளிக்கப்பட்டுவருகிறது.

மேலும் இங்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி முதல் கேத் லேப் நிறுவப்பட்டு மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதில் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை HUB ஆகவும், அதன் கீழ் முதன்மை ச்சிகிச்சை மையங்களாக குன்னுர், தாராபுரம், கோபிசெட்டிபாளையம், காங்கேயம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், உடுமலைபேட்டை, ஈரோடு, பல்லடம், கோத்தகிரி, கூடலூர், மடத்துக்குளம், சூலூர், அன்னுர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளும், உதகமண்டலம் கரூர் பெருந்துறை, ESI கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டுவருகின்றனர். எனவே இங்கு இருதய நோய் சிகிச்சை மற்றும் மாரடைப்பு நோயினால் வரக்கூடிய மக்களுக்கு முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டு பின்னர் உயர்சிகிச்சைக்காக 24 மணி நேரம் செயல்படக்கூடிய கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள்.
இதுப்போன்ற நடைமுறை கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் இதுவரை 5 ஆயிரம் பேருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் 3250 க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்கபட்டுள்ளது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்திலும் இதுப்போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது கூடுதல் சிறப்பாகும். குறிப்பாக இந்த குறுகிய காலத்தில் மக்களுக்குச் சிறப்பான மருத்துவச்சிகிச்சையை அளிப்பதற்கு இந்நேரத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வர் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவாகும் நிலையில் அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரம் ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொண்டதை மக்கள் அனைவரும் பாராட்டிவருகின்றனர்.