அனைத்தும் சென்சார் அடிப்படையில் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.
கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் மல்டிலெவல் வாகன நிறுத்துமிடம் பணி 99 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால் உள்பட 4 இடங்களில் மல்டிலெவல் வாகன நிறுத்துமிடம் மாநகராட்சி சார்பில் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதில் முதற்கட்டமாக ரூ.42 கோடி செலவில் வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் துவங்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.42 கோடி செலவில் 370 கார்கள் நிறுத்தும் வகையில் 4 அடுக்கு கொண்ட மல்டிலெவல் வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. 99 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இங்கு அனைத்தும் சென்சார் அடிப்படையில் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக நவீன ஹைட்லாலிக்ஸ் இயந்திரம் பொருத்தப்படுகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.