கோவையில் பெட்ரோல் இல்லாத வண்டியை தள்ளிச் செல்வது போல இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர் - சிசிடிவி காட்சிகளுடன் விசாரணை..!

கோவை துடியலூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் துடியலூரில் கணுவாய் செல்லும் சாலையில் இண்டியன் ஹாட் சிப்ஸ் என்ற கடை ஒன்றில் கடந்த 25ம் தேதி இரவு 10.45 மணி அளவில் அங்கு பணிபுரியும் ஊழியர் கடையை பூட்டிவிட்டு தனது இருசக்கர வாகனத்தை சைடு லாக் போடாமல் கடையின் முன் நிறுத்திவிட்டு பின்புறமாக உள்ள குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்து பார்த்துள்ளார்.

அப்போது, அங்கு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது. இதையடுத்து, கடையின் முன்புறம் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பார்த்துள்ளனர்.



அதில், ஒரு இளைஞர் சுற்றும் முற்றும் நோட்டமிட்டவாறு இருசக்கர வாகனத்தின் அருகில் வந்து சிறிது நேரம் நின்றுவிட்டு நைசாக பெட்ரோல் இல்லாத வண்டியை தள்ளிச் செல்வது போல, சாலையில் தள்ளியபடியே இருசக்கர வாகனத்தைத் திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதையடுத்து, கடை உரிமையாளர் அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சிசிடிவி காட்சியில் திருடனின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளதால் அதனை வைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...