கோவையில் கொரோனா விதிமுறை மீறிய மூன்று கல்யாண மண்டபங்களுக்கு ரூ. 12 ஆயிரம் அபராதம் விதிப்பு - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை..!

விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் நிரந்தர தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் கொரோனா விதிமுறை மீறிய மூன்று கல்யாண மண்டபங்களுக்கு ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் போத்தனூர் ரோட்டில் 3 திருமண மண்டபங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து முகூர்த்த நாட்கள் நடைபெற்று வந்ததால், இந்த திருமண மண்டபங்களில் திருமணம் மற்றும் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு கொடுத்தனர்.

அப்பொழுது, இந்த நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க தவறியதை கண்காணித்த மாநகராட்சி அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதில் இரண்டு கல்யாண மண்டபத்திற்கு தலா 5 ஆயிரமும், 1 கல்யாண மண்டபத்திற்கு 2 ஆயிரமும் மொத்தம் 12 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய தனியார் நிறுவனங்கள் அரசு வழங்கியுள்ள கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

மேலும், விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் நிரந்தர தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....