டிஜிபி உத்தரவு எதிரொலி: கோவை மாவட்டத்தில் இன்று 122 காவலர்களுக்கு வார ஓய்வு - காவல்துறையினர் மகிழ்ச்சி..!

காவலர்களின் பணி சுமையை குறைக்கும் வகையிலும், காவலர்கள் அவர்களது குடும்பத்துடன் வாரத்தில் ஒருமுறை நேரம் செலவிட சுழற்சி முறையில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாவட்டத்தில் 122 காவலர்களுக்கு இன்று வார ஓய்வு வழங்கி மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் பேரில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் மற்றும் கோவை சரக காவல் துணைத்தலைவர் முத்துசாமி, அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் அவர்கள் கோவை மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை வாராந்திர ஓய்வு அளித்து வருகிறார்.

காவலர்களின் பணி சுமையைக் குறைக்கும் வகையிலும், காவலர்கள் அவர்களது குடும்பத்துடன் வாரத்தில் ஒருமுறை நேரம் செலவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும் காவலர்களுக்கு வாராந்திர விடுப்பானது சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் மாவட்டம் முழுவது‌ம் இ‌ன்று (29.09.2021) மொத்தம் 122 காவலர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், அனைத்து காவலர்களும் அவர்களது பிறந்தநாள் மற்றும் திருமணநாள் அன்று காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தும், குடும்பத்துடன் கொண்டாட விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் காவல்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...