மாணவியிடம் ஆபாசமாக ஆன்லைனில் பேசிய பேராசிரியர்,; நிரந்தர பணிநீக்கம் செய்யக்கோரி பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.



கோவை: கோவை பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியிடம், ஆன்லைன் மூலம் ஆபாசமாக பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட் செய்ப்பட்டுள்ளார். அவரை, நிரந்தரமாக பணிநீக்கம் செய்யக் கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழக் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு முனைவர் கா. திருநாவுக்கரசு என்பவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர், அந்தக் கல்லூரி மாணவிகளிடம் அத்துமீறி ஆபாசமாக பேசுவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், திருநாவுக்கரசு, ஒரு மாணவியிடம் இரவு நேரத்தில் ஆபாசமாக பேசிய உரையாடல்கள் வெளியாகி உள்ளன.

இரவு 9.30 மணிக்கு மேல் அந்த மாணவிக்கு டெலிகிராம் செயலி மூலம் மெசேஜ் செய்யத் தொடங்கும் திருநாவுக்கரசு, 'வீட்ல எல்லாரும் வந்துட்டாங்களா? உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்! பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா? உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன் முகம் ரொம்ப அழகா இருக்கு, நீயும் நானும் இனி ரொம்ப க்ளோஸ், நீ என் கூட இருந்தா நல்லா இருக்கும், சமைக்க பழகிக்கோ, தனியா இருக்க போர் அடிக்கலயா, நைட்டுக்கு நான் வரவா, வீட்ல அம்மா இருக்காங்க இல்லாதப்போ சொல்றன் நீ வா, நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது நெறயாபண்ணலாம்.' என்றெல்லாம் அத்துமீறி பேசியுள்ளார்.

மேலும், திருநாவுக்கரசு அந்த மாணவிக்கு சட்டையைக் கழற்றி விட்டு உள் பனியனுடன் கட்டிலில் சாய்ந்த படி செல்பி எடுத்து அனுப்பியுள்ளார். பிறகு 'இதேபோல நீயும் போட்டோ எடுத்து அனுப்பு' என்று ஆபாசமாக கூறியுள்ளார். இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கேட்டதற்கு, திருநாவுக்கரசு அதை ஒப்புக்கொள்ளும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, திருநாவுக்கரசு மீது கல்லூரி நிர்வாகம் மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.



இந்நிலையில், திருநாவுக்கரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....