கோவையில் வங்கி கணக்கை புதுப்பித்து தருவதாக கூறி 3-பேரிடம் மோசடி.!!

வங்கியிலிருந்து பேசுவதாக கூறி 3-பேரிடம் இருந்து ரூபாய் 7-லட்சத்து 33- ஆயிரத்து 553-அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: வங்கி கணக்கை புதுப்பித்து தருவதாக கூறி ஓடிபி எண்ணை பெற்று கோவையில் 3-பேரிடம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி அருகே உள்ள தாஸ் அப்பன் வீதியை சேர்ந்தவர் மணிமாறன் வயது 43, இவர் கணபதியில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 26-ஆம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் வங்கி கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை அழுத்தினால் மீண்டும் வங்கிக் கணக்கை புதுப்பித்து விடலாம் என கூறப்பட்டிருந்தது.

லிங்கை பார்த்த மணிமாறன் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றார். அதில் தன்னுடைய வங்கி கணக்கு குறித்த தகவல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்தார். பின்னர் அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும் உங்களது கணக்கை புதுப்பித்துக் கொள்வதற்கு செல்போனில் வரும் ஒ.டி.பி எண்ணைக் கூறுமாறும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மணிமாறன் அந்த ஓ.டி.பி எண்ணை அந்த மர்ம நபர் இடம் கூறினார். உடனே அந்த நபர் மணிமாறன் வங்கி கணக்கிலிருந்த ரூபாய் 69 ஆயிரத்து 900 பணத்தை எடுத்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணிமாறன் மர்ம நபர் போனில் பேசி மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மணிமாறன் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இது போன்று துடியலூர் அருகே உள்ள கே.கே புதூரைச் சேர்ந்தவர் செல்வகுமரன் 38, இவர் அந்த பகுதியில் அவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவரது செல்போனுக்கும் எஸ்.எம்.எஸ் வந்தது. அதில் பேசிய நபர் செல்வகுமாரிடம் ஒ.டி.பி எண்ணை வாங்கி அவரது வங்கி கணக்கிலிருந்து 4 லட்சத்து 98 ஆயிரத்து 653 பணத்தை அபேஸ் செய்தார். இதுகுறித்து செல்வகுமார் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

சித்தாபுதூர் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 51. வக்கீல், இவரையும் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கிக் கணக்கிலிருந்த 65,000 பணத்தை எடுத்து மோசடி செய்தார்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியிலிருந்து பேசுவதாக 3 பேரிடம் இருந்து ரூபாய் 7 லட்சத்து 33 ஆயிரத்து 553 அபேஸ் செய்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால், பொதுமக்கள் இதுபோன்ற முன் பின் தெரியாத நபர்கள் யாராவது தொடர்புகொண்டு ஆதார் எண், வங்கி எண், ஓ.டி.பி எண் கேட்டால் தெரியப்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...