காரமடை அருகே சென்ற மேட்டுப்பாளையம்- கோவை தினசரி பயணிகள் ரயில் தண்டவாளத்தில் குடி போதையில் தூங்கிய வாலிபரை, இரயில் கடந்து சென்றும் காயமின்றி மீட்கப்பட்டார்.
கோவை: கோவை, துடியலூர் அருகே போதையில் ரயிலுக்கு அடியில் படுத்து தூங்கிய வாலிபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை வழக்கம்போல கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பயணிகள் ரயில் புறப்பட்டது.
அப்போது, துடியலூர் அருகே சென்ற போது, வாலிபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் குடி போதையில் உருண்டு கொண்டிருந்துள்ளார். இதைப் பார்த்த என்ஜின் டிரைவர், தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இருப்பினும், அந்த வாலிபர் எழுந்து செல்லாதால், வேறு வழியின்றி பிரேக் அடித்து ரயிலை நிறுத்த முயற்சி செய்துள்ளார். இருந்த போதும், அந்த நபர் படுத்திருந்த இடத்தை தாண்டியே இரயில் நின்றுள்ளது.

திடீரென இரயில் நிறுத்தப்பட்டதால், ரயிலில் இருந்த பயணிகள் இறங்கிச் சென்று பார்த்த போது ரயிலின் ஐந்தாவது பெட்டிக்குக் கீழ் உள்ள தண்டவாளத்தில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள், அவரை ரயிலில் அடியில் இருந்து வெளியே வர கூறினர். ஆனால், அந்த வாலிபர் வெளியே வர மறுத்துள்ளார். பின்னர் பயணிகளின் உதவியுடன் அந்த வாலிபரை 10 நிமிடம் போராடி வெளியே இழுத்து வரப்பட்டார்.
அதிர்ஷ்டவசமாக இந்த வாலிபருக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படாததைப் பார்த்த பயணிகள் அவரை அதிசய பிறவி போல் வியந்து பார்த்தனர். இச்சம்பவத்தால், ரயில் 10 நிமிடம் தாமதமாக மேட்டுப்பாளையம் புறப்பட்டுச் சென்றது.
இதற்கிடையே, அதே ரயிலில் காரமடை அருகே மாடு இன்று அடிபட்டுப் பலத்த காயமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.