கோவை செட்டிப்பாளையம் பகுதியைச்சேர்ந்த விவசாயி ஒருவருக்கு பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அருகே உள்ள செட்டிப்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் 70 வயதான நாச்சிமுத்து. இவர்கள் அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாக சளி மற்றும் காய்ச்சலினால் அவதிப்பட்டுவந்துள்ளார்.
இதனையடுத்து விவசாயி நாச்சிமுத்து செட்டிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் விரக்தியில் இருந்த அவர் விஷம் குடித்துவிட்டார். இதனால் சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்த நாச்சிமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விவசாயி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்றினால் பலர் உயிரிழந்தாலும், அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படும் போது நிச்சயம் அவர்கள் மீண்டு வருவதற்கு வாய்ப்பு அதிகளவில் உள்ளது. ஆனால் இதனைப்புரிந்துக்கொள்ளாமல் கொரோனா தொற்று உறுதியான நிலையில் விரக்தியால் விவசாயி தற்கொலை செய்துக்கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் தமிழகத்தில் சென்னையைக்காட்டிலும் கோவையில் தொற்றின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டுவந்தது. ஆனால் சில நாள்களாக தொற்றின் தாக்கம் குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது. இருந்தப்போதும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என மருத்துவத்துறை அதிகாரிகள் அறிவுறுத்திவருகின்றனர்.